Skip to content Skip to footer
கல்வி உதவி திட்டம்
ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும், அன்பியத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடும் இலட்சிய கனவோடும் ஏழை மாணவர் கல்வி திட்டம் 2.உயர் கல்வி மாணவர் திட்டம் என்ற இரு உதவி திட்டங்களை நமது மறைமாவட்டத்தின்…
ஏழை திருமண திட்டம்
அன்பிய ஒருங்கிணையங்கள் தங்கள் பங்கில் ஏழை திருமணத் திட்டத்தை பல வகைகளில் செயல்படுத்தி வருகிறது.
மருத்துவ உதவி திட்டம்
அன்பியத்திற்குட்பட்டு திடீர் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படும் நோயாளிகள், புற்றுநோயாளிகள், எயிட்ஸ் நோயாளிகள், காச நோயாளிகள், வைரஸ் தாக்குதல், நாட்பட்ட நோயாளிகள், மற்றும் பல்வேறுபட்ட நோயாளிகளுக்கு அன்பிய அளவில் மருத்துவ திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காப்பகங்கள் சந்திப்பு திட்டம்
அன்பியங்களின் வகுக்கப்பட்ட ஆண்டுத் திட்டத்தின்படி அன்பியங்கள், அன்பிய ஒருங்கிணையங்கள் வருடத்திற்கொருமுறை அல்லது இரண்டுமுறை முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், மாற்றுத்திறனாளிகள் இல்லம் மூளைவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் ஆகியவைகளைச் சந்தித்து, அவர்களோடு உறவாடி, உரையாடி, அவர்கள் இருப்பிடங்களை சுத்தம் செய்து, உணவு உண்டு…
நலம் நாடுவோர் திட்டம் மற்றும் வாழும் குடில் திட்டம்
அன்பிய மக்கள் சார்பாக தேவையிலிருப்போரை இனம்கண்டு உதவுதல், பழுதடைந்த வீடுகளைப் புதுப்பித்துக் கொடுத்தல், வீடில்லாதவர்களுக்கு புது வீடு கட்டிக் கொடுத்தல் போன்ற பணிகளை நலம் நாடுவோர் திட்டம் மற்றும் வாழும் குடில் திட்டமும் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
சுற்றுப்புறம் சீரமைத்தல் திட்டம்
அன்பிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களைச் சுத்தம் செய்தல், நெகிழிகளை அகற்றுதல், சிறிய குளங்களில் தூர் வாருதல், மின் விளக்குகளை எரிய வைத்தல், நிழல் தரும் மரங்களை நடுதல், பூச்செடிகளை நடுதல் ஆகிய பணிகளை அன்பிய மக்கள் செயல்படுத்தி வருகின்றார்கள்.
அரசின் நலத் திட்டங்கள்
நலவாரியத்தில் பெயர் சேர்த்தல், அரசின் உதவிதொகை பெற வழிகாட்டுதல், சுயத்தொழில்கள் தொடங்க வங்கி வழி கடனுதவி பெற வழிகாட்டுதல், முதியோர் மற்றும் கைபெண்கள் ஓய்வூதியம் பெற செய்தல், கைவிடபட்டோருக்கு தையல் இயந்திரம் பெற வழிகாட்டுதல், ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்தல்,மருத்துவ…
அரசின் நலத் திட்டங்கள்
உளநல விழிப்புணர்வு, இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு, பாலியல் விழிப்புணர்வு, போதை விழிப்புணர்வு மற்றும் குடிநோயாளிகளை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்லுதல், அரசியல் விழிப்புணர்வு, நெகிழி பற்றிய விழிப்புணர்வு, நீராதாரங்களை பாதுகாப்பது எப்படி? பற்றிய விழிப்புணர்வு… போன்ற பல வகையான பயிற்சிகளை…