தினம்:
குடும்பத்தில் இறைவார்த்தை வாசித்தல், குடும்ப செபம் செய்தல்
பகையில்லா வாழ்வு வாழ்தல்
கடனில்லா வாழ்வு வாழ முயற்சித்தல்
குடும்ப இன்ப/துன்ப நிகழ்வுகளில் பங்கேற்றல்
நோயற்ற வாழ்வு வாழ இயற்கையோடு இணைதல்
வாரம்:
வாரந்தோறும் அன்பியத்தில் பங்கேற்கச் செய்தல்
குழந்தைகளை மறைக்கல்வியில் பங்கேற்க செய்தல்
அன்பிய நிர்வாகிகள் அன்பிய இல்லங்களைச் சந்தித்தல்
பங்கிலிருக்கும் அனைத்து பங்கேற்பு அமைப்புகளிலும் பங்கேற்ற
திருப்பலியில் பங்கேற்பு செய்ய வழிகாட்டுதல்
அடித்தளம் வழியாக இறையாட்சியைக் கட்டியெழுப்புதல்
விவிலிய போட்டிகள் நடத்துதல்
நோயாளிகளை வீடுகளில் சந்தித்தல்
நாளிதழ் செய்தி விமர்சனம்
மாதம்:
தூய்மை மற்றும் சுகாதார பணிகள்
2.ஏழைகளுக்கு உதவி வழங்குதல்
பங்கு ஒருங்கிணைய நிர்வாகிகள் அன்பியங்களைச் சந்தித்தல்
மூன்று மாதத்தில்:
மறைமாவட்ட ஒருங்கிணைய நிர்வாகிகள் மறைவட்ட பொதுக்குழுவைச் சந்தித்தல்
மறைவட்ட பொதுக்குழு நிர்வாகிகள் மண்டலம் மற்றும் பங்கு ஒருங்கிணையங்களைச் சந்தித்தல்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாத்தல்
கல்வி, வேலை வாய்ப்பில் அரசு உதவி பற்றி விழிப்புணர்வு வழங்குதல்
கலைவிழா, கலை போட்டிகள் நடத்துதல்
கணிணி மற்றும் இண்டர்நெட் பயன்பாடு மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு வழங்குதல்
கருத்தாளர் உருவாக்க பயிற்சி அளித்தல்
ஊடகங்களின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு வழங்குதல்
மாணவர்களின் படைப்பு திறனை உருவாக்குதல்
சங்கம விழா நடத்துதல்
வருடம்:
அன்பிய விழாக்கள்
பெயர் கொண்ட புனிதர்கள் விழா
அன்பிய சுற்றுலா
அன்பிய திருப்பயணம்
உயர்கல்வி வழிகாட்டுதல்
விளையாட்டு போட்டிகள்
முதியோர் இல்லங்கள் சந்தித்தல், உதவுதல்
மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துதல்
சிறுதொழில் உதவிகள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு
சட்ட விழிப்புணர்வு பயிற்சி வழங்குதல்
சினிமா, தொலைக்காட்சியின் தாக்கம் குறித்த பட்டிமன்றம், விவாதமேடை நடத்துதல்
அரசியல் உரிமை விழிப்புணர்வு
அரசியல் பயிற்சி
மூன்று மாதத்தில்:
ஏழை மாணவர்களைத் தத்தெடுத்தல்
குடில் திட்டம்
ஏழை திருமணம்
தொடர்பயிற்சிகள்
- இசைக்கருவி மீட்டல
- பாடல்
- கிராமிய கலைகள்
தேவைக்கேற்ப
- தெரு மின்வசதி
- சாலை வசதி
- குடிநீர் வசதி
- அரசு உதவி பெறுதல் வழிகாட்டுதல்
வேலைவாய்ப்பு மற்றும் நல உதவி செய்து வாழ வழிகாட்டுல்
- அரசியல் ஈடுபாடு
அன்பிய கூட்டம் நடத்தும் இறை
1. தூய ஆவியார் பாடல்
2. வரவேற்புரை.
3. கடந்த கூட்ட செயல் அறிக்கை
4. பொருள் அறிக்கை
5. அறிக்கை ஆய்வு
6. நற்செய்தி வாசகம்
7. மனதைத் தொட்ட இறைவார்த்தையை அறிக்கையிடுதல்
8. நற்செய்திப் பகிர்வு (விளக்கம்)
9.அடித்தளம் வாசித்து சிந்தனைகளைப் பகிர்தல்
10. திட்டங்கள், தீர்மானங்கள்
11. திறன் வளர்த்தல்
12. பத்திரிக்கை செய்தி
13. அறிவிப்புகள்
14. கொண்டாட்டங்கள் ( பிறந்தநாள், திருமணநாள்)
15. இதர விஷயங்கள்
16. நன்றியுரை
17. அன்பிய பாடல்
குழித்துறை மறைமாவட்டம்:
அன்பிய மாநாட்டின் தீர்மானங்கள் - 2025
1. ஒவ்வொரு பங்கிலும் அன்பியத்திற்கு ஒரு நபர் வீதம் இணைந்து மருத்துவ குழு உருவாக்குதல்
2. ஆரோக்கியமான வாழ்வு வாழ, இயற்கையோடு இணைதல்.
3. கடனில்லா வாழ்வு வாழ, சேமிக்கும் பழக்கம் உருவாக்கம்.
4. பகையில்லா வாழ்வு வாழ, உடனிருப்பவர்களோடு ஒன்றித்தல்.
அன்பிய பாடல்:
ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும் ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்ப வேண்டும் மானுட நேயங்கள் மண்ணில் மலர வேண்டும் (இந்த) 2
விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும் கடவுளின் கொடைகளில் -அதில் அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே
விண்ணவரின் அன்பின் அரசு மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2) புனித பூபாளம் இசைத்திட இணைவோம் வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம்-2
சாதிகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட
பிறர் குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து சமத்துவம் காணுவோம் – விண்ணவரின்….